கிரிக்கெட்

இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது ஆச்சர்யம் இல்லை: வால்ஷ் சொல்கிறார்

Published On 2024-05-08 14:48 GMT   |   Update On 2024-05-08 14:48 GMT
  • இந்திய அணியில் இன்னும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
  • பெரும்பாலான அணிகளில் நல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் 3 பேர் இடம் பிடித்துள்ள நிலையில் சுழற்பந்து வீச்சில் நான்கு பேர் ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா, அக்சார் பட்டேல் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

நான்கு ஸ்பின்னர்கள் எதற்கு என்பது போட்டி நடைபெறும் போது தெரியும் என ரோகித் சர்மா விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது ஆச்சர்யம் அளிக்கவில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வால்ஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வால்ஷ் கூறியதாவது:-

இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளதால் நான் ஆச்சர்யம் படவில்லை. அது அவர்களின் பலத்தை காட்டுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. மாறுபட்ட கண்டிசனில் எல்லோரும் அணியை சமநிலைப்படுத்த வேண்டும்.

இந்திய அணியில் இன்னும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பெரும்பாலான அணிகள் அதேபோன்று உள்ளன. எனவே இது மிகவும் போட்டி நிறைந்த தொடராக இருக்கும். பெரும்பாலான அணிகளில் நல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இந்த தொடர் பேட்ஸ்மேன்களுக்கு சாதமான வகையில் இருக்க போகிறது. ஆனால் வெற்றி பெறப்போவது யார் என்பது கணிப்பது கடினம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என கணிப்பது கடினம். திறமையை சிறப்பாக வெளிப்படும் அணி வெற்றி பெறும்.

இவ்வாறு வால்ஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News