கிரிக்கெட் (Cricket)
null

கோலி தொடர்பான தகவலில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்: டி வில்லியர்ஸ்

Published On 2024-02-09 12:44 IST   |   Update On 2024-02-09 13:08:00 IST
  • விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
  • விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர் என டி வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இரண்டு டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணத்தை மேற்கோள்காட்டி இந்திய அணியில் இருந்து விலகினார். இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலி தெரிவித்திருந்தார். பிசிசிஐ-யும் இது குறித்து முழு அறிக்கை வெளியிட்டு விராட் கோலிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதற்கிடையே விராட் கோலியின் விலகலுக்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.

விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர். அதனால்தான் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இதன் காரணமாகவே டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

எஞ்சிய 3 டெஸ்டிலும் கோலி விளையாடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

விராட் கோலி- அனுஷ்கா சர்மா (கோப்புப்படம்)

இந்த நிலையில் விராட் கோலி குறித்து தவறான தகவல் பகிர்ந்து விட்டேன் என்று டி வில்லியர்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

எனது யூடியூப் சேனலில் நான் கூறியது போல் குடும்பம் முதன்மையானது. அதே நேரத்தில் நான் ஒரு பயங்கரமான தவறு செய்து விட்டேன். விராட் கோலி குறித்து உண்மையில்லாத தவறான தகவலை பகிர்ந்து கொண்டேன்.

அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அவரது உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும். இந்த இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவர் வலிமையாகவும், சிறப்பாகவும் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News