கிரிக்கெட் (Cricket)

சமூக வலைதளங்களில் பேசுவதை பற்றி கவலை பட மாட்டேன்- ஹர்திக் பாண்ட்யா

Published On 2024-02-29 18:31 IST   |   Update On 2024-02-29 18:31:00 IST
  • இப்போது நான் வெளியே செல்வதில்லை என்பது என்னைப் பற்றி என் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும்.
  • கடந்த 2 -3 வருடங்களாக நான் பொதுவெளிக்கு வருவதில்லை

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், 2019 உலகக் கோப்பையில் இடம் பிடித்தார். அந்த தொடரில் காயத்தால் விலகினார். பின்னர் 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

இதனை தொடர்ந்து 2023 உலகக் கோப்பையிலும் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறினார். தற்போது அதிலிருந்து குணமடைந்து வரும் அவர் நேரடியாக ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாட உள்ளார். அதனால் ஹர்திக் பாண்டியா நாட்டுக்காக தொடர்ந்து விளையாட மாட்டார். ஆனால் பணத்துக்காக மட்டும் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே வருகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இப்போது நான் வெளியே செல்வதில்லை என்பது என்னைப் பற்றி என் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும். கடந்த 2 -3 வருடங்களாக நான் பொதுவெளிக்கு வருவதில்லை. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே வருகிறேன்.

இப்போதெல்லாம் வீட்டிலேயே இருக்க விரும்புகிறேன். அதனால் 50 நாட்கள் கூட வீட்டை விட்டு வெளியேறாத நேரங்கள் இருந்தன. அதனால் சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நான் பேசமாட்டேன். அங்கே யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News