கிரிக்கெட் (Cricket)

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கதவை தட்டவில்லை உடைத்து விட்டார்- அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஹர்பஜன்

Published On 2024-05-20 23:48 IST   |   Update On 2024-05-20 23:48:00 IST
  • அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார்.
  • இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் தேர்வுக்குழு கதவையும் கிட்டத்தட்ட உடைத்துள்ளதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார். இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

அந்தளவுக்கு பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர் இன்னும் பந்து வீசவில்லை. அவர் நல்ல ஆல் ரவுண்டர். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவர் சதத்தை தவற விட்டதற்காக மகிழ்ச்சியுடன் இல்லை. ஆனால் அவர் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸை விளையாடினார். ரஞ்சிக் கோப்பையில் என்னுடைய தலைமையில் தான் அவர் பஞ்சாப் அணியில் அறிமுகமானார்.

அந்த வகையில் இந்தளவுக்கு வளர்ந்து அவர் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தற்போது இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவை சுற்றியுள்ளார். ஒருநாள் அவர் இந்திய அணிக்குள் நுழைந்து விடுவார்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

அதே போல அபிஷேக் சர்மா விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங்கும் சமீபத்தில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News