கிரிக்கெட்

விக்கெட் வீழ்த்திய பும்ரா

பர்மிங்காம் டெஸ்டில் பும்ரா அசத்தல் - இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 84/5

Published On 2022-07-02 18:25 GMT   |   Update On 2022-07-02 18:25 GMT
  • இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதமடித்தனர்.
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்தியாவின் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

பர்மிங்காம்:

இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னிலும், ஜாக் கிராலி 9 ரன்னிலும், ஒல்லி போப் 10 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து இன்னிங்சின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.

அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி பொறுமையுடன் ஆடியது. ஜோ ரூட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார், ஜாக் லீச் டக் அவுட்டானார்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், சிராஜ், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News