கிரிக்கெட்

எனது அழுத்தத்தால் கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் கார்த்திக் - தீபிகா கண்ணீர்

Published On 2024-05-24 08:46 GMT   |   Update On 2024-05-24 08:46 GMT
  • தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.
  • மைதானத்திற்கு வெளியே, நான் அவருடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.

எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்தார்.

தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஆர்சிபி அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அணி வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் சங்கர் பாசு, தினேக் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்களது எமோஷனலை பகிர்ந்துள்ளனர்.


வீடியோவில் விராட் கோலி கூறியதாவது:- டி.கே.வை முதன் முதலில் சந்தித்தது 2009 சாம்பியன்ஸ் டிராபி. தென்னாப்பிரிக்காவில் விளையாடினோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, நான் தினேஷுன் உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொண்டது அதுவே முதல் முறை. அப்போது தான், அவர் மிகவும் வேடிக்கையாக இருப்பதைக் கண்டேன். மிகவும் சுறுசுறுப்பானவர்.

மைதானத்திற்கு வெளியே, நான் அவருடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன். அவர் ஒரு புத்திசாலி, கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்களைப் பற்றி அபார அறிவு கொண்டவர். அவருடனான எனது உரையாடல்களை நான் மிகவும் ரசித்துள்ளேன். அவர் விரும்பும் விஷயங்களை பற்றி யாரிடமும் சென்று பேசும் அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

தினேஷ் கார்த்திக் குறித்து அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் கூறியிருப்பதாவது:- தினேஷ் கார்த்திக்கின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டேன். கார்த்திக் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை நீங்கள் அடிக்கடி காண முடியாது. கார்த்திக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதால், தன்னுடனும் அவர்களது குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவிடுவார். என்னுடைய வற்புறுத்தலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.

Tags:    

Similar News