கிரிக்கெட்

அதிரடியாக ஆடிய ஹரி நிஷாந்த்

ஹரி நிஷாந்த் அதிரடி - கோவையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது திண்டுக்கல்

Update: 2022-06-26 17:12 GMT
  • திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.
  • அதிரடியாக ஆடிய ஹரி நிஷாந்த் 36 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்தார்.

நெல்லை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். சுரேஷ் குமார் 37 ரன்னும், கங்கா ஸ்ரீதர் ராஜு 33 ரன்னும், ஷிஜித் 30 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அணியின் எண்ணிக்கை 100 ஆக இருந்தபோது ஹரி நிஷாந்த் 60 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய விவேக் 10 பந்தில் 3 சிக்சர் உள்பட 22 ரன் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பிரதீப் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Tags:    

Similar News