கிரிக்கெட்
null

சேப்பாக்கத்தில் இதே நாளில் கர்ஜித்த ஷேவாக்... மாஸ் வீடியோவுடன் நினைவு கூர்ந்த சிஎஸ்கே

Update: 2023-03-28 08:19 GMT
  • சேவாக் இதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முச்சதம் அடித்தார்.
  • இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டு இதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தார்.


அதனை நினைவு கூறும் வகையில் சிஎஸ்கே அணியின் டுவிட்டர் பக்கத்தில் அவர் முச்சதம் அடித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அன்புடென்-ல் சேவாக் கர்ஜித்த தருணம் என்று தலைப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சேவாக் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News