கிரிக்கெட்
null

2-வது டி20யில் மேக்ஸ்வெல் மிரட்டல்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 240 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

Published On 2024-02-11 10:16 GMT   |   Update On 2024-02-11 10:35 GMT
  • மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார்.
  • டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.

சிட்னி:

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - இங்கிலீஸ் களமிறங்கினர். இங்கிலீஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய வார்னர் 22 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டோய்னிஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

Tags:    

Similar News