கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் போட்டி- 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 214/5

Published On 2023-07-22 18:03 GMT   |   Update On 2023-07-22 18:03 GMT
  • இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • களத்தில் இருந்த மார்னஸ் சதம் அடித்து 111 ரன்களை குவித்தார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி நேற்று 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் கவாஜா, வார்னர் களமிறங்கினர். கவாஜா 18 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக களமிறங்கிய மார்னஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஸ்டீவின் ஸ்மித் 17 ரன்களும், திராவிஸ் ஹெட் ஒரு ரன்னும் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் பின்னடைவில் உள்ளது. இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இன்று விளையாடியது. களத்தில் இருந்த மார்னஸ் சதம் அடித்து 111 ரன்களை குவித்தார். இதேபோல், மிட்செல் மார்ஷ் 31 ரன்கள் எடுத் ஆட்டமிழக்காமல் உள்ளார். கேமரூன் கிரீன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 71 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

Tags:    

Similar News