சினிமா செய்திகள்

மத்திய பிரதேசம் கோவிலில் விக்னேஷ் சிவன், நயன்தாரா சாமி தரிசனம்

Published On 2025-11-10 09:17 IST   |   Update On 2025-11-10 09:17:00 IST
விக்னேஷ் சிவன்-நயன்தாராவுடன் ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில், டியூட் படம் ரிலீஸால் தள்ளிப்போனது.

இதற்கிடையே, விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் ஹாய். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி அவ்வபோது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

இவர்களுடன் ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்த நந்தி சிலைக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர்.

பின்னர், இவர்களுக்கு சிறப்பு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News