சினிமா செய்திகள்

VIDEO: நான்தான் ஷாருக் கான்.. மெட் காலா ஷோவில் யார் என்று கேட்ட நிருபர் - COOL பதில் கொடுத்த கிங்

Published On 2025-05-06 15:38 IST   |   Update On 2025-05-06 15:38:00 IST
  • நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி, திஷா பதானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
  • முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட் காலா 2025 ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக ஆண்டுதோறும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில் உலகெங்கிலும் உள்ள திரைப் பிரபலங்கள் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர். வித்தியாசமான உடையில் தோன்றி கேரமா முன் போஸ் கொடுப்பதே இந்நிகழ்வின் சாராம்சம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.

ஸ்டைலான கருப்பு நிற உடையில், கழுத்தில் 'K' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பெரிய செயின் உடன் ஷாருக் கான் தனக்கே உரிய ஸ்டைலில் தோன்றினார்.

 இந்த நிகழ்வில் சுவாரஸ்யமான சம்பவமாக, வெளிநாட்டு ஊடகங்கள் ஷாருக் கானை அடையாளம் காணத் தவறியுள்ளன. நிகழ்வில் ஒரு நிருபர் ஷாருக் கானிடம் நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர் சிரித்தவாறே, நான் தான் ஷாருக் கான் என்று கூறியுள்ளார். இந்த உரையாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் கடவுள் அந்தஸ்தில் பார்க்கும் ஷாருக் கானை யார் என்று கேட்ட நபரை நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News