சினிமா செய்திகள்

சரத்குமார் - விஜய்

"ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டும்".. விஜய் குறித்து சரத்குமார் கருத்து

Published On 2023-06-18 10:34 IST   |   Update On 2023-06-18 10:34:00 IST
  • விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்த நிகழ்வு குறித்து சமக தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.


விஜய்

இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடிகர் விஜய் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் கல்விக்கு உதவுவது வரவேற்கத்தக்கது. எல்லா நடிகர்களும் பொதுநல சேவையில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர் மன்றம் மூலம் உதவிகளை செய்து வருகின்றனர். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.


சரத்குமார்

நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து வருகிறேன். வரும் 2026 தேர்தலை எப்படி சந்திக்கனும் என்று திட்டங்களை வகுத்து வருகிறேன். அனைவரும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவசியம். அரசியல் ஞானம் 14 வயதில் இருந்தே பள்ளி பாடத்திட்டத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதனால் யார் அரசியலுக்கு வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News