சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள்

Published On 2025-09-26 10:38 IST   |   Update On 2025-09-26 10:38:00 IST
  • சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
  • 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள பணக்கார நடிகைகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நயன்தாரா அதிக சொத்து சேர்த்த நடிகை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

2-வது இடத்தில் பால்நிற மேனி நடிகை தமன்னா இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். தென்னிந்திய சினிமா தாண்டி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.

முன்னணி நடிகை திரிஷா ரூ.85 கோடி சொத்துடன் 4-ம் இடத்தில் இருக்கிறார். 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

Tags:    

Similar News