சினிமா செய்திகள்

ஒரு வார்த்தை கேட்க.. ஜன நாயகன் சர்ச்சையிலிருந்து விலகி நிற்கும் விஜய் - 'Central' சமாச்சாரம் என்பதாலா?

Published On 2026-01-08 14:52 IST   |   Update On 2026-01-08 14:52:00 IST
விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ, விஜய்க்கு சம்மன் அனுப்பியது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய் இது தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்கப்படவில்லை.

எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளதாவும், அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனால் இதுவரை சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம் என்பதால் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு புறம் சோகத்தின் இருக்க மறுபுறம் விஜய்யின் படத்தை சென்சார் வாரியம் மூலம் மத்திய அரசு குறிவைத்து அரசியல் அழுத்தம் தருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமலாக்கத்துறை, சிபிஐ போல சென்சார் வாரியாதையும் மிரட்டல் கருவியாக மோடி அரசு மாற்றி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயன் சர்ச்சை குறித்து திரைபிரபலங்கள் குரல் எழுப்பினாலும், தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட எவையும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதற்கு ஒரு படி மேல் ஜனநாயன் ஹீரோ விஜய் இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்காதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்சார் வாரியம் மத்திய அரசின் கீழ் வருவதால் அரசியலில் பாஜகவுக்கு Soft corner உடன் செயல்படும் விஜய், சினிமா விஷயத்திலும் எதற்கு வம்பு என இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலேசியாவில் நடந்த ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில், தனது படம் என்றாலே பிரச்சனை வரும் என விஜய் பேசியிருந்தார். அது மாநில அரசை குறிவைத்தே அவர் கூறியதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தற்போதைய பிரச்சனை மத்திய வளையத்துக்குள் வருகிறது.

இதே இடத்தில் மாநிலத்தில் ஆளும் திமுக இருந்திருந்தால் விஜய் வேறுமாதிரி ஹேண்டில் செய்திருப்பாரோ என்று தோன்றுவது இயல்பே. ஆனாலும் சில தீவிர விஜய் ரசிகர்கள் cum ஆதரவாளர்கள் இந்த விஷயத்தில் பாஜகவும் - திமுகவும் கூட்டு என கருத்து சொல்லி வருகின்றனர்.

எதுவாக இருந்தாலும் விஜயின் மௌனம் இது மத்திய விவகாரம் என்பதாலேயே இருக்கும் என ஊகிக்கலாம். அண்மையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ, விஜய்க்கு சம்மன் அனுப்பியது.

சிபிஐ சம்மன், ஜனநாயகன் சென்சார் என இரண்டையும் வைத்து விஜய்க்கு 2026 சட்டமன்றத் தேர்தல் ஆதாயத்துக்கு விஜய்க்கு அழுத்தம் தரப்படுகிறதா என்றும் யோசிக்க வேண்டி உள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே இந்த Theory -ஐ முன்வைத்து வருகிறது. மேலும் பல Theoryகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அவை பின்வருமாறு,

Theory 1 : அதிமுக பாஜக கூட்டணிக்கு வர தவெகவுக்கு அழுத்தம் தரப்படுகிறது.

Theory 2: விஜய் தனித்தே போட்டியிடட்டும், ஆனால் பிரசாரத்தில் திமுகவை மட்டுமே டார்கெட் செய்ய வேண்டும், எந்த காரணம் கொண்டும் மத்திய பாஜகவை விமர்சிக்க கூடாது. 

 Theory 3: விஜயே அனுதாபத்துக்காக இப்படி எல்லாம் செய்கிறார்.

எதுவாக இருந்தாலும் விஜய் வாய் திறந்த பேசினால் தீர்வு கிடைக்கும் அல்லது குறைந்தபட்சம் ரசிகர்கள் cum ஆதரவாளர்களுக்கு தெளிவு பிறக்கும். எது எப்படியோ ஜனநாயகன் பொங்கலுக்கு சென்சார் வாரியம் பொங்க வைத்திவிட்டதே நிதர்சனம்.

பின் குறிப்பு: இதேபோல சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திற்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்படம் ஜனவரி 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்திற்கான முன்பதிவை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

Tags:    

Similar News