null
என் அன்பு நண்பருக்கும், அருமை நண்பருக்கும் மனமார்ந்த நன்றி- ரஜினிகாந்த்
- ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
- பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.
இந்த நிலையில், தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அந்த பதிவில் அவர்,"ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்றார்.
இதேபோல், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், "என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி" என்றார்.