சினிமா செய்திகள்

`என்றும் உன்னுடையவன்' - திருமண நாளில் மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்த மோகன்லால்

Published On 2025-04-29 15:49 IST   |   Update On 2025-04-29 15:49:00 IST
  • மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால்.
  • இவர் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சுசித்ராவை திருமணம் செய்துக்கொண்டார்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்புரான் மற்றும் துடரும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சுசித்ராவை திருமணம் செய்துக்கொண்டார். இவர் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் பாலாஜியின் மகளாவார். இந்த தம்பதிக்கு பிரனவ் மற்றும் விஸ்மய என்று ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் நேற்று அவர்களது 36 வருட திருமண நாளை கொண்டாடினர். இதை மோகன்லால் அவரது மனைவிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து அதில் " என் அன்புள்ள சுச்சிக்கு ஹேப்பி ஆனிவர்சரி. என்றென்றும் நன்றியுடன், என்றென்றும் உன்னுடையவனாக..." என காதல் நிறைந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News