சினிமா செய்திகள்

குட் பேட் அக்லி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த டைரக்டர்

Published On 2024-12-15 01:11 IST   |   Update On 2024-12-15 01:11:00 IST
  • அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
  • குட் பேட் அக்லி திரைப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

சென்னை:

கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டணி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இதைத்தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் பிரசன்னா, அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், இந்த வாழ்நாள் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அஜித் சார், கனவு முழுமை அடைந்தது. இன்று அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News