சினிமா

இளையராஜா இசை தான் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கான தாக்கம் - ஷான் ரோல்டன்

Published On 2019-04-12 13:34 GMT   |   Update On 2019-04-12 13:34 GMT
இளையராஜா இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள் என்று படவிழாவில் ஷான் ரோல்டன் பேசினார். #MehandiCircus #Ilayaraja
இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கராஜ், சுவாதி திரிபாதி, விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் விழா நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது: ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கு இன்ஸ்பிரே‌ஷன் இளையராஜா சார் தான். குறிப்பாக அவரது இசையில் 80-களில் வெளியான படங்களை தனியாகச் சொல்லலாம். பாடலின் வரிகள், இசைக்கோர்வைகள் அனைத்துமே ஒரு மேஜிக்கலாக இருக்கும். அதே போல் செய்து பார்த்தால் சரியாக வராது.



அவருடைய இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். பழைய இசை, புதிய இசை என்று பலர் விவாதம் செய்வதாக கேள்விப்பட்டேன்.

என்னைப் பொறுத்தவரை எப்போதுமே நல்லாயிருக்கிற இசை தான் நல்ல இசை. பழைய இசை என்று ஒன்று கிடையாது. இளையராஜா சாருடைய இசையை பழையது என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. கிணற்றில் எப்போதுமே தண்ணீர் வந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இளையராஜாவின் இசையும். இன்னுமொரு 50 ஆண்டுகள் கழித்து அவரது இசையைக் கேட்டால் அதிலிருந்து ஒரு இன்ஸ்பிரே‌ஷன் கிடைக்கும். அவரது இசையை மேலோட்டமாகப் பார்த்தால் சிம்பிளாகத் தெரியும். இசையையே டெக்னாலஜியாக உபயோகித்தவர் இளையராஜா.

இவ்வாறு அவர் கூறினார். #MehandiCircus #Ilayaraja

Tags:    

Similar News