சினிமா

கொல மாஸா ஒரு டிரைலர் - விஸ்வாசம் படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்

Published On 2018-12-29 15:48 IST   |   Update On 2018-12-29 15:48:00 IST
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 10 நாட்களுக்குள் வரும் என்று சிவா கூறியிருக்கிறார். #Viswasam #AjithKumar #ViswasamTrailer
வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ரீலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் படக்குழுவினரும் படத்தை பற்றிய தகவல்களை அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணமாக இருப்பதால், மாற்றி மாற்றி இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

ரஜினி நடித்த பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியாகிய நிலையில், விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் எடிட்டர் ரூபன் ட்விட்டர் பக்கத்தில், கொல மாஸாக ஒரு டிரைலர் வருது. விஸ்வாசம் டிரைலர் விரைவில்.. என்று குறிப்பிட்டுள்ளார்.


இதன்மூலம் விஸ்வாசம் படத்தின் டீசருக்கு பதிலாக டிரைலரை ரிலீஸாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #Viswasam #AjithKumar #ViswasamTrailer

Tags:    

Similar News