சினிமா

10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு

Published On 2018-11-29 06:07 GMT   |   Update On 2018-11-29 06:07 GMT
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியும், கடைசியில் ஐமேக்ஸ் திரையரங்கில் ரிலீசாகவில்லை. #2Point0 #Rajinikanth #AkshayKumar
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் இன்று ரிலீசாகி புதிய சாதனை படைத்துள்ளது.

‘2.0’ இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு படத்தையும் எடுத்துள்ளனர். ஹாலிவுட் படங்களை போல், ஐமேக்ஸ் தியேட்டர்களில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்திருந்ததாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் படம் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகவில்லை.

படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவதில் தாமதமானதால், படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியிடவில்லை. எனினும் 2 வாரங்களில் ஐமேக்ஸ் திரையில் 2.0 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐமேக்ஸ் திரையில் 2.0 ரிலீசாகும் பட்சத்தில் அங்கு திரையிடப்படும் நேரடி முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 2.0 படத்திற்கு கிடைக்கும்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமை 2.0 படத்திற்கு கிடைத்துள்ளது.

முதன் முறையாக 4டி ஒலி தொழில்நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்திய படங்கள் அனைத்தையும் பாகுபலி, வசூலில் பின்னுக்கு தள்ளி உலக அளவில் பேசப்பட்டது. அதுபோல் 2.0 படமும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான இடத்தை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar

Tags:    

Similar News