சினிமா

சர்கார் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது - நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-11-02 09:02 GMT   |   Update On 2018-11-02 09:02 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sarkar #Vijay
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மகேந்திர பாண்டி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அதில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் சர்கார் படத்துக்கு ரூபாய் 500 முதல் 1,000 வரை ஆன்லைனில் வசூலித்து விதி மீறலில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பும் நடைபெறுகிறது. எனவே, மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017-ல் உள்துறை செயலர் (சினிமா) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.



நேற்று இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்துவைத்தனர். #Sarkar #Vijay 

Tags:    

Similar News