சினிமா

2.0 படத்தில் ஐந்தாம் விசை

Published On 2018-10-29 14:48 IST   |   Update On 2018-10-29 14:48:00 IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ஐந்தாம் விசை வருவதாக குறிப்பிட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #2Point0
‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் இணைந்து நடித்துள்ள படம் `2.0'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டிரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில், அக்‌‌ஷய் குமார் ஏற்றுள்ள கதாபாத்திரம் தனது கையில் உடைந்த செல்போனை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

மேலும் “ஐந்தாம் விசை வருகிறது” எனவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ‌ஷங்கர். அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதால் தற்போது படத்தின் மீது புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயற்பியல் உலகில் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த அணுக்கரு விசை மற்றும் தளர்ந்த அணுக்கரு விசை என நான்கு விசைகளே அகில விசைகளாக அறியப்பட்டு வருகின்றன.

பிரபஞ்சத்தில் ஐந்தாவதாகவும்கூட ஒரு விசை இருப்பதாகப் பல்வேறு கோட்பாடுகள் உலவுகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியிலும் பலர் ஈடுபட்டுள்ளார்கள். இப்படியான சூழலில் இந்தப் படத்திற்கு ஐந்தாம் விசை தியரியைக் கனெக்ட் செய்திருக்கும் காரணத்தால் அதுகுறித்த படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 29-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. #2Point0 #Rajinikanth #FifthForce

Tags:    

Similar News