சினிமா

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Published On 2018-07-25 10:54 IST   |   Update On 2018-07-25 10:54:00 IST
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து விசிறி சூட் என்ற ஆடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
தர்புகா சிவா இசையில் விசிறி, நான் பிழைப்பேனோ என இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். #ENPT #Dhanush

Tags:    

Similar News