சினிமா

கொலைகாரன் படக்குழுவின் முக்கிய தகவல்

Published On 2018-07-25 08:58 IST   |   Update On 2018-07-25 09:06:00 IST
ஆண்ட்ரூ இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் `கொலைகாரன்' படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kolaikaran #VijayAntony
`காளி' படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ மற்றும் ‘கொலைகாரன்’ படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கொலைகாரன்’ படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். படத்தில் விஜய் ஆண்டனியுடன், நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம், ரசிகர்களை கவர்ந்து விட்ட அர்ஜுன், இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.



தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

முகேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun

Tags:    

Similar News