சினிமா

பாலியல் தொல்லை குறித்து வீடியோ வெளியிட்ட நந்திதா

Published On 2018-07-03 11:17 IST   |   Update On 2018-07-03 11:17:00 IST
அசுரவதம் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்துள்ள நந்திதா படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக தான் செய்ய தவறியதை பற்றி பேசுவதாகக் கூறி பாலியல் தொல்லை பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #NanditaSwetha
அசுரவதம் படத்தில் சசிகுமார் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நந்திதா. 
இந்த நிலையில், சமூகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவது குறித்தும், அதில் இருந்து எப்படி தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் நந்திதா பேசியதாவது,

அசுரவதம் படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நான் செய்ய தவறியதை பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். நாம் வாழும் இந்த சமுதாயத்தில் நம்ம குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் எந்த ரூபத்தில், எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது ரொம் கஷ்டம். குறிப்பாக பாலியல் தொல்லை. ஒருவருக்குள் அப்படி ஒரு மிருக குணம் இருக்கிறது என்பதை அவர்கள் முகத்தை பார்த்து நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அப்படினா எப்படி நம்ம குழந்தை அதை கண்டுபிடிச்சு அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும். 

ரொம்ப கஷ்டம். பொதுவாக ஒரு குழந்தையை தொட்டு, கொஞ்சிப்பேசி, முத்தம் கொடுப்பதை நமது கலாச்சாரத்தில் அவ்வளவு பெரிய தப்பா பார்ப்பதில்லை. அதை தான் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் ரொம்ப வசதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம்ம குழந்தைகளும் அதை புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்கு பலியாகின்றனர். 

இதை தடுக்க நாம் நமது குழந்தைகளை இந்த மாதிரி ஆபத்தான இடங்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். யாராவது அவர்களுக்கு தொல்லை கொடுத்தால் அவர்களை காட்டிக் கொடுப்பதும் தான். இந்த இரண்டுமே இந்த சமூகத்தில் நமது குழந்தைகள் வாழவும், வளரவும் ரொம்ப அவசியம். 

இவர்களிடம் இருந்து தப்பிக்க என்னனென்ன செய்ய வேண்டும். எப்படி தப்பிக்க வேண்டும் என்பது குறித்து வீடியோவில் விளக்கி உள்ளார். #NanditaSwetha

நந்திதா பேசிய முழு வீடியோ:
Tags:    

Similar News