சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடல்களை வெளியிட்டார் கமல்

Published On 2018-07-01 21:40 IST   |   Update On 2018-07-01 21:40:00 IST
விஸ்வரூபம்-2 படத்தின் பாடல்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் சுருதியுடன் இணைந்து வெளியிட்டார் கமல் ஹாசன். #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து `நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு நேற்றுமுன்தினம் (ஜூன் 29-ந்தேதி) வெளியிட்டது. 

ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில், கமல் பாடிய அந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களுடன் பேசுவார்.

இன்று அந்த நிகழ்ச்சி தொடங்கியது. கமல்ஹாசன் தனது மகள் சுருதியுடன் கலந்துகொண்டார். அப்போது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்களை வெளியிட்டார். தனது மகள் சுருதியுடன் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.  #Vishwaroopam2 #KamalHaasan
Tags:    

Similar News