என் மலர்
நீங்கள் தேடியது "பிக்பாஸ் நிகழ்ச்சி"
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. #BigBosstamil
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் லூயிசாள் ரமேஷ் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் பிக்பாஸ்-2 என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனது கட்சியை வளர்க்கும் வகையில் பேசுகிறார்.
ஆனால் அரசியல் அநாகரிகத்துடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஜெயலலிதாவை சர்வாதிகாரி போன்று சித்தரித்து இந்த நிகழ்ச்சியில் பேசப்படுகிறது.
ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BigBosstamil

விஸ்வரூபம்-2 படத்தின் பாடல்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் சுருதியுடன் இணைந்து வெளியிட்டார் கமல் ஹாசன். #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து `நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு நேற்றுமுன்தினம் (ஜூன் 29-ந்தேதி) வெளியிட்டது.
ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில், கமல் பாடிய அந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களுடன் பேசுவார்.

இன்று அந்த நிகழ்ச்சி தொடங்கியது. கமல்ஹாசன் தனது மகள் சுருதியுடன் கலந்துகொண்டார். அப்போது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்களை வெளியிட்டார். தனது மகள் சுருதியுடன் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். #Vishwaroopam2 #KamalHaasan