கார்

இந்த 4 கார்களுக்கு மட்டும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. மாருதி சுசுகி அசத்தல்!

Published On 2023-07-25 20:02 IST   |   Update On 2023-07-25 20:02:00 IST
  • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களின் காத்திருப்பு காலம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
  • நான்கு மாருதி கார்களுக்கு காத்திருப்பு காலம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களுக்கு குறைந்த பட்சம் மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனினும், இந்த நிலை அந்நிறுவன கார் மாடல்கள் அனைத்திற்கும் பொருந்தாது.

மாருதி சுசுகி செலரியோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்களுக்கு ஜூலை 2023 மாதத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் இந்த மாடல்கள் அனைத்தும் மாருதி சுசுகி அரினா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

மேலும் இந்த மாடல்கள் வினியோகம், விரைவில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. செலரியோ, வேகன்ஆர் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்களில் 1.0- லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல், AMT கியர்பாக்ஸ், CNG கிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

வேகன்ஆர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஸ்விப்ட் மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News