கார்

33.85 கிமீ மைலேஜ் வழங்கும் ஆல்டோ K10 S-CNG வேரியண்ட் அறிமுகம்

Published On 2022-11-19 09:15 GMT   |   Update On 2022-11-19 09:15 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் S-CNG பொருத்தப்பட்ட கார்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது.
  • சமீபத்தில் மாருதி சுசுகி பலேனோ மற்றும் XL6 கார்களின் S-CNG வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி சுசுகி நிறுவனம் புதிய ஆல்டோ K10 S-CNG வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆல்டோ K10 S-CNG விலை ரூ. 5 லட்சத்து 94 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஆல்டோ K10 S-CNG சேர்த்தால் இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தத்தில் 13 S-CNG கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்தும் ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன.

புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 S-CNG மாடலில் 1.0 லிட்டர், K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 56 ஹெச்பி பவர், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கார் லிட்டருக்கு 33.85 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

"ஆல்டோ பிராண்டு எப்போதும், மாருதி சுசுகி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் கனவுகளுக்கு ஏற்ப எப்படி தங்களை மாற்றிக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அடையாளம். ஆல்டோ மாடல் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளுக்கு அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. மேலும் புதிய S-CNG மாடல் இதன் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும்."

"இதுவரை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக S-CNG வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறோம். புதிய ஆல்டோ K10 மாடலில் S-CNG கிட் வழங்கி இருப்பதை அடுத்து, பலர் இந்த காரை வாங்க விரும்புவர். எஹ்கலின் S-CNG பிரிவு மிகவும் விசேஷமைக டிசைன் செய்யப்பட்டு, இந்திய சாலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது." என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த நிர்வாக அலுவலர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News