கார்

கார்களை ரிகால் செய்யும் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா - ஏன் தெரியுமா?

Published On 2023-01-24 10:42 GMT   |   Update On 2023-01-24 10:42 GMT
  • மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் இந்தியாவில் ரிகால் செய்யப்படுகின்றன.
  • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரு கார்களும் இதுவரை மூன்று முறை ரிகால் செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா இந்தியா நிறுவனங்கள் தங்களின் கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளன. இரு கார்களின் ரியர் சீட் பெல்ட் மவுண்ட் பிராகெட்-இல் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக ரிகால் செய்யப்படுகின்றன.

மாருதி கிராண்ட் விட்டாரா மாடலின் 11 ஆயிரத்து 177 யூனிட்களும், டொயோட்டா ஹைரைடர் மாடலின் 4 ஆயிரத்து 026 யூனிட்களும் ரிகால் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 8, 2022 முதல் நவம்பர் 15, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் இம்முறை பாதிக்கப்பட்டுள்ளன.

இரு நிறுவன உற்பத்தியாளர்கள் சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்போர், அவற்றை சரி செய்ய சர்வீஸ் மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ரிகால் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தை விரைந்து சரி செய்வது பெரும் ஆபத்தை தவிர்க்க உதவும்.

முன்னதாக இரு எஸ்யுவி மாடல்களும் இருமுறை ரிகால் செய்யப்பட்டுள்ளன. ஒருமுறை காரின் முன்புற சீட் பெல்ட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் மறுமுறை ஏர்பேக் கண்ட்ரோலர் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் இரு கார்களும் ரிகால் செய்யப்பட்டன. ரிகால் நடவடிக்கைகள் கார்களின் நீண்ட நாள் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் முயற்சி ஆகும். 

Tags:    

Similar News