கார்

உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டி அசத்திய கியா இந்தியா

Published On 2023-07-15 06:13 GMT   |   Update On 2023-07-15 06:13 GMT
  • இந்திய வாகனங்கள் சந்தையில் ஆகஸ்ட் 2019 ஆண்டு கியா இந்தியா களமிறங்கியது.
  • சமீபத்தில் தான் கியா நிறுவனத்தின் புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

கியா இந்தியா நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் ஆலையில் இருந்து பத்து லட்சமாவது யூனிட்-ஐ வெளியிட்டு உள்ளது. இந்திய சந்தையில் இத்தகைய மைல்கல்-ஐ அதிவேகமாக எட்டிய நிறுவனங்களில் ஒன்றாக கியா இந்தியா இருக்கிறது.

இந்திய சந்தையில் ஆகஸ்ட் 2019 ஆண்டு கியா இந்தியா களமிறங்கியது. கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பத்து லட்சமாவது யூனிட்-ஆக கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது.

 

"எங்களுக்கும், எங்களது ஊழியர்கள், நாட்டில் எங்களது பயணத்திற்கு ஆதரவு கொடுத்து, இந்திய நுகர்வோர் மத்தியில் கியா பிரான்டை கொண்டு சேர்த்த அனைவருக்கும் இது மிகப் பெரிய தருணம் ஆகும். அவர்களின் ஆதரவு மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அனுப்புக்கு நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம். கியா இந்தியா நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உணர முடிகிறது."

"இந்திய சந்தையில் ஆட்டோமோடிவ் பிரிவில் சிறந்து விளங்கும் நோக்கில், புதிய தொடக்கமாக புதிய செல்டோஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதுமைகளை புகுத்துவது, எல்லைகளை கடந்து, இந்திய ஆட்டோமொபைல் எதிர்காலத்தை வடிவமைத்தலில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்," என்று கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டே-ஜின் பார்க் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News