கார்

பெருமளவு மாற்றங்களுடன் அறிமுகமான 2023 ஹோண்டா அக்கார்டு

Published On 2022-11-12 08:55 GMT   |   Update On 2022-11-12 08:55 GMT
  • ஹோண்டா நிறுவனத்தன் புதிய தலைமுறை அக்கார்டு மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய அக்கார்டு மாடல் இரு பெட்ரோல் மற்றும் நான்கு ஹைப்ரிட் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹோண்டா நிறுவனத்தின் 11th Gen அக்கார்டு மாடல் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் அளவில் பெரியதாகவும், முன்பை விட அதிகளவு ஆடம்பரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா சிவிக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய அக்கார்டு மாடல் அதன் பாரம்பரிய தோற்றத்தை இழக்காமல் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா அக்கார்டு மாடலில் குறிப்பிடத்தக்க அம்சமாக 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 189 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புது மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் நீக்கப்பட்டு இருக்கிறது.

ஹைப்ரிட் அக்கார்டு மாடலில் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் மற்றும் இரு மோட்டார்கள் கொண்ட ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 335 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

காரின் வெளிப்புறம் மெல்லிய டிசைன் கொண்டுள்ளது. முன்புறம் அப்ரைட் கிரில், பிளாக்டு அவுட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிஸ்டின்டிவ் ஹாரிஜாண்டல் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அக்கார்டு மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரியர் ஸ்பாயிலர் உள்ளது.

உள்புறத்தில் பிரீமியம் பாகங்கள், அதிக சவுகரியமான இருக்கைகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்ட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா அக்கார்டு மாடலின் விலை மற்றும் வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News