ஆட்டோமொபைல்

ஆல்டோவுக்கு போட்டியாக புதிய கார் உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்

Published On 2019-03-21 10:24 GMT   |   Update On 2019-03-21 10:24 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாருதியின் ஆல்டோ காருக்கு போட்டியாக என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. #TataMotors



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய டாடா ஹேட்ச்பேக் கார் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் டாடா டியாகோ, டிகோர் மற்றும் நெக்சான் உள்ளிட்ட மாடல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் பிரிவில் டாடா சார்பில் எந்த மாடலும் இதுவரை அறிமுகமாகவில்லை. இந்த குறையை போக்க நானோ மாடல் இருந்தபோதும், இது எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை.



இதனால் டாடா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் ஆல்ஃபா (ALFA) பிளாட்ஃபார்மில் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மில் 3.6 முதல் 4 மீட்டர் வரையிலான நீளமுள்ள கார்களை உருவாக்க முடியும். 

ஏற்கனவே டியாகோ, டிகோர் மற்றும் நெக்சான் உள்ளிட்ட கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துவிட்டது. முன்னதாக ஆல்ஃபா வடிமைப்பு அல்ட்ரோஸ்  பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த கார் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் டாடா மோட்டார்ஸ் இன் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் ஆகும். இந்த ஹேட்ச்பேக் மாடலில் டாடாவின் புத்தம் புதிய இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் சமீபத்தில் நடந்து முடிந்த 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News