ரூ. 2.79 லட்சத்தில் அறிமுகமான ஹார்லி X440 T... என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா..?
- இது மோட்டார்சைக்கிளில் இரண்டு ரைடு மோட்கள் உள்ளன.
- இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் X440 T மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான புதிய ஹார்லி X440 T பைக்கின் விலை ரூ. 2.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இந்த பைக் பேர்ல் ப்ளூ, பேர்ல் ரெட், பேர்ல் ஒயிட் மற்றும் விவிட் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
ஹார்லி -டேவிட்சன் X440 T பைக்கில் X440 பைக்கில் இருப்பதை விட நிறைய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. X440 பைக்கின் மிகப்பெரிய குறைபாடாக அதன் டெயில்-பிரிவு வடிவமைப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஹார்லி-டேவிட்சன் X440 T பைக்கில் சப்-ஃபிரேம் மற்றும் டெயில் பகுதியை மறுவடிவமைப்பு செய்வது, அதை ஒரு ஒருங்கிணைந்த வடிவமைப்பாக மாற்றியுள்ளது.
அம்சம் வாரியாக, இந்த பைக்கில் ரைடு-பை-வயர் த்ரோட்டில், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ரியர் ABS ஆகியவை உள்ளன. இது மோட்டார்சைக்கிளில் இரண்டு ரைடு மோட்கள் உள்ளன. மேலும், இது ஒரு பிரிவில் பைக் மாடல்களில் -முதல் முறையாக இதில் பானிக் பிரேக்கிங் அலர்ட் உள்ளது. இது அவசரகால பிரேக்கிங்கின் போது அனைத்து இன்டிகேட்டர்களையும் ஒளிர செய்கிறது.
புதிய அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் அப்டேட்களைத் தவிர, X440 T மாடலில் ஏற்கனவே விற்பனையில் உள்ள X440 மாடலில் உள்ள என்ஜினே பயன்படுத்துகிறது. அந்த வகையில், இந்த பைக்கிலும் 440cc, ஏர்/லிக்விட்-கூல்டு மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த யூனிட் 27bhp பவர், 38Nm டார்க் உருவாக்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.