பைக்

இணையத்தில் லீக் ஆன ராயல் என்பீல்டு ஹண்டர் விவரங்கள்

Update: 2022-06-15 08:16 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் நீண்ட காலமாக ஹண்டர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது.
  • இந்த மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.

ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு மீடியோர் 350 பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

எனினும், இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய ஹண்டர் மாடல் பற்றி ஏராளமான விவரங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் ரக மாடல் என்றும் இதன் ஃபியூவல் டேன்க் டியர்-டிராப் வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் நீண்ட ஒற்றை இருக்கை, வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், டர்ன் இண்டிகேட்டர்கள், ரியர் வியூ மிரர்கள் மற்றும் சற்றே உயர்ந்த பின்புறம் கொண்டிருக்கிறது.


மேலும் இந்த மாடலில் அகலமான ஹேண்டில் பார்கள், மிட்-செட் ஃபூட் பெக், மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட ஸ்போர்ட் தர அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருப்பது, ஸ்கிராம்ப்ளர் போன்ற ஸ்டைலிங் உள்ளிட்ட அம்சங்களை வைத்து பார்க்கும் போது இது மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட குறைந்த எடையில் உருவாகி இருக்கும் என தெரிகிறது.

புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளிலும் 349சிசி என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

Photo Courtesy: Bikewale

Tags:    

Similar News