பைக்

பி.எம்.டபிள்யூ. G310 RR இந்திய புக்கிங் துவக்கம்

Update: 2022-06-11 08:42 GMT
  • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் G310 RR பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • தற்போது இந்த மாடலுக்கான புக்கிங் துவங்கி உள்ளது.

பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் டி.வி.எஸ். அபாச்சா RR310 சார்ந்த பி.எம்.டபிள்யூ. G310 RR மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலின் டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பி.எம்.டபிள்யூ. G310 RR மாடலுக்கான புக்கிங் இந்தியாவில் துவங்கி உள்ளது.

புதிய பி.எம்.டபிள்யூ. G310 RR மாடலுக்கான புக்கிங் பி.எம்.டபிள்யூ. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் வலைதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. G310 RR மோட்டார்சைக்கிள் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கான வினியோகம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அன்ற அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது.


விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலிலும் அபாச்சி RR 310 மாடலில் உள்ளதை போன்றே 313சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன், டிராக், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம். புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் வழங்கப்பட இருக்கும் டெயில் லைட், மிரர், விண்ட் ஸ்கிரீன் போன்ற பாகங்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது.

Tags:    

Similar News