ஆட்டோமொபைல்

பஜாஜ் பல்சர் 220 எஃப் ஏ.பி.எஸ். விலை அறிவிப்பு

Published On 2019-01-09 11:29 GMT   |   Update On 2019-01-09 11:29 GMT
பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பல்சர் 220 எஃப் மோட்டார்சைக்கிளின் விலையை அறிவித்தது. #bajaj #Pulsar



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 220 எஃப் மோட்டார்சைக்கிளின் ஏ.பி.எஸ். வெர்ஷனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

பஜாஜ் பல்சர் 220எஃப் ஏ.பி.எஸ். வெர்ஷன் வரும் வாரங்களில் வெளியாகலாம் என தெரிகிறது. இந்தியாவில் புதிய பல்சர் ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ரூ.1.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஏ.பி.எஸ். வசதியில்லாத மாடலின் விலையை விட ரூ.7,600 வரை அதிகம் ஆகும்.



பஜாஜ் பல்சர் 220 எஃப் இந்தியாவில் பிரபலமான என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்ஸ் மாடலாக இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனினும், இந்த மோட்டார்சைக்கிளில் புதிய கிராஃபிக்ஸ் மற்றும் கிராஷ் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

புதிய பல்சர் மோட்டார்சைக்கிளில் 220சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.9 பி.ஹெச்.பி. பவர், 18.5 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 260 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகளுடன் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News