ஆன்மிக களஞ்சியம்

ராமேஸ்வரம் கோடி தீர்த்தம்

Published On 2023-09-15 11:30 GMT   |   Update On 2023-09-15 11:30 GMT
  • இத்தீர்த்தம், வடக்கு முதல் பிரகாரத்தில் விசாலாட்சியம்மை சன்னதிக்கு அருகில் உள்ளது.
  • இதில் நீராடியவர் இட்ட சித்தியும், ஞான முத்தியும் பெறுவர்.

இத்தீர்த்தம், வடக்கு முதல் பிரகாரத்தில் விசாலாட்சியம்மை சன்னதிக்கு அருகில் உள்ள கிணறு.

இதில் எவரும் தாமே நீர் எடுத்து முழுக முடியாது.

அதற்கென உள்ள பிராமணர் நீர் முகந்து ஊற்றியே பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

இத்தீர்த்தம் பிற தீர்த்தங்கள் அனைத்தையும் விட மேலானது.

இத்தீர்த்தத்தில் நீராடிய பிறகு ராமேசுவரத்தில் தங்கியிருத்தல் கூடாது என்பது ஐதிகம்.

அதனாலேயே இதற்குக் கோடி தீர்த்தம் என்னும் பெயர் உண்டாயிற்று.

இத்தீர்த்தத்து நீரையே மக்கள் கலசங்களில் கொண்டு செல்வது வழக்கம்.

எக்காலத்தும் இந்நீர் கெடுவதில்லை.

கிருஷ்ண பகவான் இத்தீர்த்தத்தில் நீராடி கம்சனைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

இதில் நீராடியவர் இட்ட சித்தியும், ஞான முத்தியும் பெறுவர்.

Tags:    

Similar News