ஆன்மிக களஞ்சியம்

அட்சய திருதியை நாளில் புது முயற்சியை தொடங்குங்கள்

Published On 2023-09-16 06:58 GMT   |   Update On 2023-09-16 06:58 GMT
  • பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
  • மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.

ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள்) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.

இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்,

ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும்,

வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ''அட்சய திருதியை யாகவும்'' (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது.

சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.

வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன.

இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது.

பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.

மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர்.

இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.

Tags:    

Similar News