search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி - சென்னை சூப்பர் கிங்சுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
    X

    ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி - சென்னை சூப்பர் கிங்சுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, சென்னை அணியின் வெற்றிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி,  பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். 2-வது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 


    4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது. ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது.  ஏழாவது ஓவரை கரண் சர்மா வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணியினர் 9 ரன்கள் எடுத்தனர். 8-வது ஓவரை வீசிய பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 

    9-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஷகிப்-அல்-ஹசன் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த ஓவரில் ஜடேஜா 8 ரன்களை விட்டுக்கொடுத்தார். 



    10-வது ஓவரில் சஹார் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். சஹார் 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. 

    11-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஒவரில் ஐதராபாத் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. 12-வது ஓவரை பிராவோ வீசினார். ஐதராபாத் அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 100-ஐ எட்டியது. அந்த ஓவரில் பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 13-வது ஓவரை கரண் சர்மா வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சன் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார். 13-வது ஓவரில் ஐதராபாத் அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது. 



    16-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன், ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். அவர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். 17-வது ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அதன்பின் கார்லோஸ் பிரத்வெய்ட் இறங்கினார். 18-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. பிராவோ 4 ஓவர் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.



    கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரத்வெய்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். யூசுப் பதான் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    Next Story
    ×