search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா அணிக்கு பெரிய இழப்பு- காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகுகிறார்
    X

    கொல்கத்தா அணிக்கு பெரிய இழப்பு- காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகுகிறார்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டிற்காக தயாராகி வந்த மிட்செல் ஸ்டார்க்கிற்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகியுள்ளார். #IPL2018 #KKR
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. வார்னர், ஸ்மித், பேன்கிராப்ட் ஆகியோர் இல்லாத நிலையில், வேகப்பந்து வீச்சின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சின் மூலம் அணியை வழி நடத்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் களம் இறங்கவில்லை.

    காயத்தால் விளையாடாத மிட்செல் ஸ்டார்க் சொந்த நாடு திரும்புகிறார். அங்கு காயம் குறித்து மதிப்பீடு செய்ய பின்னர்தான் அவரது காயத்தின் வீரியம் குறித்து தெரியவரும். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்டார்க் விலக வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவிட் செய்துள்ளது.



    மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அந்த அணி 19 வீரர்களை மட்டுமே ஏலம் எடுத்துள்ளது. சர்வதேச அளவில் முன்னணி பந்து வீச்சாளரான ஸ்டார்க், ஐபிஎல் தொடரில் பங்கேற்காவிடில் கொல்கத்தா அணிக்கு அது பெரிய இழப்பாகும்.

    அந்த அணியில் வினய் குமார், மிட்செல் ஜான்சன், அந்த்ரே ரஸல் ஆகியோருடன் கம்லேஷ் நகர்கோடி, ஷிவம் மவி ஆகிய இளம் வீரர்கள் உள்ளனர்.
    Next Story
    ×