என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 சராசரியுடன் 10 ஆயிரம் ரன்கள்- கோலி, ஜோ ரூட்டுக்கு அடுத்த இடத்தில் ஸ்மித்
    X

    50 சராசரியுடன் 10 ஆயிரம் ரன்கள்- கோலி, ஜோ ரூட்டுக்கு அடுத்த இடத்தில் ஸ்மித்

    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 50-க்கு மேலான சராசரியுடன் 10 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார். #SAvAUS
    ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த மூன்று வருடங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில் ரன்கள் குவித்து வருகிறார். தற்போது டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டிற்கு முன் ஸ்மித் 61 டெஸ்டில் 111 இன்னிங்சில் 6057 ரன்கள் குவித்திருந்தார்.

    தலா 23 சதம் மற்றும் அரைசதங்களுடன் சராசரி 63.75 வைத்துள்ளார். 108 ஒருநாள் போட்டியில் 94 இன்னி்ங்சில் 8 சதம், 19 அரைசதங்களுடன் 3431 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 41.84 ஆகும். 30 டி20 போட்டிகளில் 25 இன்னிங்சில் 2 அரைசதங்களுடன் 431 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 21.55 ஆகும்.

    டர்பன் டெஸ்டிற்கு முன் ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டியில் 9919 ரன்கள் அடித்திருந்தார். டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 56 ரன்களும், 2-வது இன்னிங்சில் 38 ரன்களும் அடித்தார். இதன்மூலம் 200 போட்டிகளில் 232 இன்னிங்சில் 10013 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 50.31 ஆகும். இதில் 31 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் அடங்கும்.



    இதன்மூலம் 50 சராசரியுடன் 10 ஆயிரம் ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 331 போட்டிகளில் 365 இன்னிங்சில் 17125 ரன்களுடன் 55.60 சராசரியுடன் முதல் இடத்தில் உள்ளார். இதில் 56 சதங்கள், 80 அரைசதங்கள் அடங்கும்.

    ஜோ ரூட் 195 போட்டிகளில் 241 இன்னிங்சில் 10770 ரன்களுடன் 50.80 சராசரி வைத்து 2-வது இடத்தில் உள்ளார். இதில் 23 சதங்கள் 68 அரைசதங்கள் அடங்கும்.
    Next Story
    ×