என் மலர்

  செய்திகள்

  பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறப்பு - கம்பம் விவசாயிகள் ஆத்திரம்
  X

  பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறப்பு - கம்பம் விவசாயிகள் ஆத்திரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்காமல் வைகை அணைக்காக திறக்கப்பட்டதால் கம்பம் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.
  கூடலூர்:

  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நெல்சாகுபடி இரு போகம் செய்யப்படுகிறது. முதல் போகத்துக்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாகவே முறையாக திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

  இந்த வருடம் கோடை மழையைத் தொடர்ந்து தென் மேற்கு பருவமழையும் பெய்து வந்ததால் முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். மேலும் அணையின் நீர் மட்டம் 118 அடியை கடந்த போதே தண்ணீர் திறப்பு உறுதி என விவசாயிகள் உறுதியாக நம்பினர்.

  இது குறித்து அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் நேற்று காலை முதல் அதிகாரிகள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 900 கன அடி தண்ணீர் திறந்து விட்டனர்.

  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் சமயத்தில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். ஆனால் இது போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் பெரியாறு அணையில் இருந்து நேற்று கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

  இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது வைகை அணையின் நீர் மட்டம் குறைந்த அளவே இருப்பதால் அதனை உயர்த்தும் நோக்கில் தண்ணீர் திறக்கப்பட்டதாக தெரிவித்தனர். வைகை அணையில் தற்போது 700 மில்லியன் கன அடிக்கும் குறைவாக நீர் உள்ளது. மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் வரத்து இருந்தால் மட்டுமே வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் மேலும் கூடுதலாக 1150 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

  பாசனத்துக்கு தண்ணீரை எதிர்பார்த்து கம்பம் விவசாயிகள் தங்கள் நிலங்களை தயாராக வைத்துள்ள நிலையில் முன்னறிவிப்பின்றி கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

  அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  Next Story
  ×