என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி
    X

    சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி

    சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.17,900 மற்றும் ரூ.20,900 விலையில் வெளியிடப்பட்டன. 

    அந்த வகையில் இந்தியாவில் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் முறையே ரூ.14,900 மற்றும் ரூ.18,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலையில் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000 மற்றும் ரூ.2000 வரை குறைக்கப்பட்டுள்ளன.

    இதுமட்டுமின்றி அமேசான் மற்றும் பேடிஎம் வலைத்தளங்களில் நான்கு நாட்களுக்கு சாம்சங் சிறப்பு விற்பனை திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் அமேசான் மற்றும் பேடிஎம் வலைத்தளங்களில் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் சிறப்பு விற்பனையில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 உண்மை விலையில் இருந்து ரூ.8,000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை ரூ.59,900-க்கு வாங்க முடியும். இதேபோன்று கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.4000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் சேர்த்து ரூ.28,990க்கு வாங்கிட முடியும்.



    சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் ரூ.2000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    கேஷ்பேக் சலுகை மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்ட பத்து நாட்களில் கேஷ்பேக் தொகை அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும்.

    எக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வாங்கப்பட்ட சாதனங்களுக்கான கேஷ்பேக் அமேசான் பே கணக்கில் ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்ட 20 நாட்களுக்குள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பேடிஎம் மால் தளம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட் 8 வாங்குவோருக்கு ரூ.8000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் கேஷ்பேக் சலுகை மார்ச் 8-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×