என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்திய AI விஞ்ஞானியை தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. xAI-க்கு புதுவரவு - யார் இவர்? | Devendra Singh Chaplot
    X

    இந்திய AI விஞ்ஞானியை தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. xAI-க்கு புதுவரவு - யார் இவர்? | Devendra Singh Chaplot

    • ஐஐடி பாம்பேவில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர்.
    • சாம்சங், மெட்டாவில் பணியாற்றியுள்ளார்.

    உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI இல் இந்திய ரோபாட்டிக்ஸ் நிபுணர் தேவேந்திர சிங் சாப்லோட் இணைந்துள்ளார். xAI என்பது சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) உடைய ஏஐ பிரிவாகும்.

    எலான் மஸ்க்குடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சூப்பர் இன்டலிஜென்ஸ்-ஐ உருவாக்கும் இலக்கோடு xAI குழுவில் இணைந்திருப்பதாக தேவேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு மஸ்க் பதிலளித்து வரவேற்றுள்ளார்.

    யார் இந்த தேவேந்திர சிங் சாப்லோட்?

    தேவேந்திர சிங் இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி பாம்பேவில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர். பின்னர், அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் மெஷின் லேர்னிங் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.

    தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸில் தனது பணியைத் தொடங்கினார். அதன்பின், மெட்டா நிறுவனத்தில் AI ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.

    பிரான்ஸின் முன்னணி AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Mistral AI இல் மல்டிமோடல் ஆராய்ச்சி குழுவிற்குத் தலைமை தாங்கினார். 'மிஸ்ட்ரல் 7பி' போன்ற சக்திவாய்ந்த AI மாடல்களை உருவாக்குவ முக்கியப் பங்காற்றினார்.

    தற்போது xAI நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளர் (Technical Staff Member) ஆகப் பொறுப்பேற்றுள்ளார்.

    தேவேந்திர சிங் தனது ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சிக்காக 2020-ம் ஆண்டு பேஸ்புக் பெல்லோஷிப் உள்ளிட்ட பல சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ளார்.

    Next Story
    ×