என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஹெச்எம்டி குளோபல் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் அப்டேட் வழங்கி வருகிறது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் 17-வது நோக்கியா ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

    முன்னதாக நோக்கியா 8.1, நோக்கியா 9 பியூர்வியூ, நோக்கியா 7.1, நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 6.1, நோக்கியா 2.2, நோக்கியா 7.1, நோக்கியா 3.2, நோக்கியா 4.2, நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 2.3, நோக்கியா 6.2, நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஆண்ட்ராய்டு

    நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் 2018 மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு வெளியிடப்பட்டது. பின் இதற்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட்டும், தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

    புது அப்டேட் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கு பிரைவசி மற்றும் செக்யூரிட்டி அம்சங்கள், டார்க் தீம், ஃபோக்கஸ் மோட், பிரத்யேக பிரைவசி செக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 ஸ்மா்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ரியல்மி நிறுவனம் ரியல்மி 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் சென்சார், 2 எம்பி மேக்ரோ செனஅசார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 
    பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 30 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி 7

    ரியல்மி 7 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
    - 900MHz மாலி-G76 3EEMC4 ஜிபியு
    - 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
    - 8 ஜிபி (LPPDDR4x) ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி போர்டிரெயிட் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ சென்சார்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 7 ஸ்மார்ட்போன் மிஸ்ட் வைட் மற்றும் மிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது.
    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    போக்கோ பிராண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்சமயம் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய போக்கோ எம்2 இந்தியாவில் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட்போன் அறிவிப்பை டீசர்களின் மூலம் போக்கோ தெரியப்படுத்தி இருக்கிறது. டீசரின் படி போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. போக்கோ எம்2 அறிமுக நிகழ்வு செப்டம்பர் 8, மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

     போக்கோ எம்2

    போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ எம்2 மாடல் வாட்டர்டிராப் நாட்ச், பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. 

    முந்தைய போக்கோ எம்2 ப்ரோ மாடலில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது. வரும் நாட்களில் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
    சியோமியின் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 

     ரெட்மி 9ஏ

    ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:

    - 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
    - ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி 
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6799 என்றும் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனம் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்51 மாடலினை இந்திய சந்தையில் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் வெளியாக இருக்கிறது.

    இதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் கேலக்ஸி எம்31எஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 7000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி எம்51

    சாம்சங் கேலக்ஸி எம்51 சிறப்பம்சங்கள்

    - 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
    - அட்ரினோ 618 ஜிபியு
    - 6 ஜிபி  / 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 7000 எம்ஏஹெச் பேட்டரி
    - 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போன் ஏற்கனவே டென்மார்க்கில் கிடைக்கிறது. இதன் விலை 360 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 31,600 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ரியல்மியின் புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போன் அன்பாக்சிங் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. லீக் ஆன வீடியோவில் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருந்தது. இத்துடன் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் விவரங்களும் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 64 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

     ரியல்மி 7

    ரியல்மி 7 மாடலின் குவாட் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்படும் என்றும் பேக் பேனலில் ரியல்மி பிராண்டிங் வழங்கப்படுகிறது. செல்ஃபி கேமராவுக்கென ஸ்கிரீனின் இடதுபுற ஓரத்தில் பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்படுகிறது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போனை சுற்றி தடிமனான பெசல்கள் காணப்படுகிறது.
    அதிநவீன கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. போக்கோ எக்ஸ்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் புது ஸ்மார்ட்போன் போக்கோ எக்ஸ்3 பெயரில் அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய போக்கோ எக்ஸ்3 சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதுபற்றிய டீசர்களை பொருத்தவரை விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     போக்கோ எக்ஸ்3

    போக்கோ நிறுவன விளம்பர பிரிவு மேலாளரின் ட்விட்டர் பதிவின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கேமரா சென்சார் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 16 எம்பி ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்கும் என கூறப்படுகிறது.

    கேமரா விவரங்களுடன், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் ப்ரோ மோட், அப்ரேச்சர், எக்ஸ்போஷர், ஐஎஸ்ஒ மற்றும் வைட் பேலன்ஸ் உள்ளிட்டவற்றை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ சீரிஸ் பிரிவில் அறிமுகமாக இருப்பதாகவும் இது கேலக்ஸி ஏ12 பெயரில் அழைக்கப்பட இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ11 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ125எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ115எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

     கேலக்ஸி ஏ21

    சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்துடன் எல்சிடி ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கேலக்ஸி ஏ12 இதே வடிவமைப்பு கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகி வருகிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தனது மிட் ரேன்ஜ் மாடலை ஒன்பிளஸ் நார்டு எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இதுதவிர ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் கொண்ட மற்றொரு 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் ஒன்பிளஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    க்ளோவர் எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்கா உள்பட உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

    ஒன்பிளஸ் நார்டு

    ஒன்பிளஸ் க்ளோவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.52 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
    -ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
    - அட்ரினோ 610 ஜிபியு
    - 4 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மூலம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    அந்த வகையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் வித்தியாசமாக கேமரா செட்டப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் பின்புற பேனல் வடிவமைப்பு அமெரிக்காவின் எஃப்சிசி வலைதளத்திலும் லீக் ஆகி இருந்தது. இதில் வித்தியாசமான கேமரா லே-அவுட், டைமண்ட் வடிவம் கொண்டுள்ளது.

     போக்கோ எக்ஸ்3

    போக்கோவின் புது ஸ்மார்ட்போன் வடிவமைப்பை அம்பலப்படுத்தும் நான்கு படங்களை பதிவிட்டு, அவற்றில் எது உண்மையான கேமரா செட்டப் கொண்டிருக்கும் என போக்கோ செய்தி தொடர்பாளரும், விளம்பர பிரிவு மேலாளருமான அங்கஸ் கை ஹோ என்ஜி தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

    முந்தைய எஃப்சிசி வலைதள விவரங்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் எம்2007ஜெ20சிஜி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் 64 எம்பி ஏஐ சூப்பர் கேமரா லேபெலுடன் 64 எம்பி பிரைமரி சென்சார் வழங்கப்பட இருக்கிறது. 
    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது கே20 ப்ரோ மாடல் விலை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.


    இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

    முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டது. பின் கடந்த மாதமும் இதன் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்பட்டது.

    புதிய விலை குறைப்பின் படி ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22,999 என மாறி இருக்கிறது. முன்னதாக இதே வேரியண்ட் ரூ. 26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், ஃபிளேம் ரெட், பியல் புளூ மற்றும் கிளேசியர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

     ரெட்மி கே20 ப்ரோ

    ரெட்மி கே20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், லேசர் AF, EIS
    - 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
    - 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 27 வாட் சோனிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டீசர்களை தொடர்ந்து ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. டீசரின்படி ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 65 வாட் சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 2-ஆம் தலைமுறை குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட இருப்பதையும் ரியல்மி உறுதியாக தெரிவித்து இருக்கிறது. ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகவேகமாக சார்ஜ் ஆகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும். இது பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 32 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது.

     ரியல்மி 7 டீசர்

    ரியல்மி 7 சீரிஸ் மாடல்களுக்கு பிளைன்ட் ஆர்டர் விற்பனை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பயனர்கள் ரூ. 1000 செலுத்தி புதிய ஸ்மார்ட்போனை நிச்சயம் வாங்கிக் கொள்ளும் உறுதியை பெற முடியும். 

    பின் ஸ்மார்ட்போனிற்கான மீதித் தொகையை செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தலாம். இந்த விற்பனையில் கலந்து கொள்வோர் ரியல்மி ஏஐஒடி சாதனங்களை வாங்கும் போது ரூ. 100 தள்ளுபடி பெற முடியும். ரியல்மி 7 ப்ரோ வாங்குவோருக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரை தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது.
    ×