search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீராபென்"

    • ராஜ்கோட்டில் நயாரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் பணி நடந்தது.
    • இந்த தடுப்பணை கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நயாரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி கடந்த 4-ம் தேதி நடந்தது. 400 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட இந்த தடுப்பணை கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் 2 வாரங்களில் பணி முடிய உள்ள நிலையில் தற்போது அதற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சமீபத்தில் மரணம் அடைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் நினைவாக ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உடல் நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் காலமானார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(வயது 100) மோடி காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ந் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தனது தாயார் ஹீராபெனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 


    அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.


    நரேந்திர மோடி -ஹீராபென்

    இதற்கிடையே, குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து இயக்குனர் சீனுராம்சாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு. பாசத்தில் நிகரற்றது. எந்நேரமும் தாயின் கவலை பிள்ளையின் உணவு பற்றியது தான். மாண்புமிகு பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்.



    • பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். தாயாரின் நலம் விசாரிக்க பிரதமர் மோடி குஜராத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது. அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்தி நகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீரா பென்னைச் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

    குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×