search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளகோவிலில்"

    • ஒரு கிலோ முருங்கை ரூ.15முதல் 35 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    • 40 விவசாயிகள் 5டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 40 விவசாயிகள் 5டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 முதல் 25 வரைக்கும், மரம் முருங்கை ரூ.15முதல் 20வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.30முதல் 35வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
    • 160 மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1922ம் ஆண்டு துவங்கப்பட்டது.

    1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 160 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு வெள்ளகோவில் தன்னார்வு அமைப்பின் சார்பில் நாப்கின் எந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.பி. தனலட்சுமி, தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் பி.சிவக்குமார் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தன்னார்வளர்கள் எஸ்.ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் நேப்கின் எரியூட்டல் எந்திரத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, நளினி. மற்றும் மேற்கு தோட்டம் கார்த்திகேயம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ். என். சாமிநாதன். பள்ளி மேலாண்மை கல்விக்குழு தலைவர் கஸ்தூரி ரம்யா, உறுப்பினர் பானுமதி உட்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×