search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிபொருட்கள் கடத்தல்"

    • கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
    • பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    அரூர்:

    தருமபுரியில் இருந்து கோவைக்கு வெடிெபாருட்கள் ஏற்றி செல்வதாக சேலம் மாவட்டம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று கருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதனை ஓட்டி வந்த டிரைவர் இளையராஜா (33) என்பவர் 2 ஆயிரத்து 953 கிலோ வெடி பொருட்கள் இருந்தது. வெடி பொருட்களை தருமபுரியில் இருந்து கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இதில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் கார்த்திக் (35) என்பவரும், அரூர் அருகே ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆகிய 2 பேரும் கொடுத்த தகவலின்படி மினிலாரியில் 2 ஆயிரத்து 953 கிலோ வெடிபொருட்களை பென்னாகரத்தில் இருந்து ஏற்றி கொண்டு கோவைக்கு சென்றதாக கைதான இளையராஜா போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள கார்த்திக்கை பிடிக்க வந்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குமாரும் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தலைமறைவாக உள்ள 2 பேரையும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வெடிபொருட்கள் ஏற்றி சென்றதாக கூறப்படும் பென்னாகரத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ×